Our Work:

சமூக நிகழ்வுகள்

Sri Lankan Pride is an annual celebration dedicated to honoring the Sri Lankan LGBTIQ+ community, allies, supporters, LGBTIQ+ organizations, and the broader LGBTIQ+ movement. Hosted by Équité, this vibrant event brings together individuals and organizations to celebrate diversity, inclusion, and equality. Every year, Sri Lankan Pride creates a platform to amplify the voices of the LGBTIQ+ community and strengthen the movement for equal rights.

Thai Pongal Celebration - Nuwara Eliya - 2025

Équité இலங்கையில் மத்திய மாகாண அலுவலகம் மற்றும் சமூக நலன்புரி மையம் இணைந்து தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடினோம். சூரிய பகவானின் அருளும் வளமும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என வாழ்த்தினர்.மலையகத் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த இளம் LGBTIQ+ சமூக உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கொண்டாட்டம், வெறுப்பு மற்றும் கோபத்திற்குப் பதிலாக அமைதி, கருணை மற்றும் சகோதரத்துவத்தைப் பரப்புவதை வலியுறுத்தியது. அன்பையும் ஒற்றுமையையும் பகிர்ந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

Capacity-Building Program - Nuwara Eliya 2025

Équité நிறுவனத்தின் நுவரெலியா கிளை, 12 இளம் LGBTIQ+ சமூக உறுப்பினர்களைச் சமூகத் தலைவர்களாக உருவாக்கும் நோக்கில் ஆறு மாத திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத்திட்டத்தில் திரைப்படக் காட்சிகள், கலை சிகிச்சை, விழாக் கொண்டாட்டங்கள் மற்றும் கவிதை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.ஆகஸ்ட் 31ஆம் திகதி, Équité பாதுகாப்பு இல்லத்திலும் கந்தே எல நீர்த்தேக்கத்திற்கு அருகிலும் இசை மற்றும் மண்டலக் கலை சிகிச்சை நிகழ்வுகள் நடைபெற்றன. இத்திட்டத்தில் இணைய விரும்பும் மத்திய மாகாண இளம் LGBTIQ+ சமூகத் தலைவர்கள் மேலதிக தகவல்களுக்கு எம்மைத் தொடர்புகொள்ளலாம்.

Bhool Bhulaiya 3 Screening - Nuwara Eliya - 2025

Équité நுவரெலியாவில், LGBTIQ+ சமூக உறுப்பினர் ஒருவரின் உண்மை வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட Bhool Bhulaiya 3 திரைப்படம் திரையிடப்பட்டு, கலந்துரையாடலும் நடைபெற்றது. மாதாந்தம் நடைபெறும் இந்நிகழ்வுகள் மலையகத் தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் தமிழ் சமூக உறுப்பினர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றன. இதன் மூலம் மனநலம், தன்னம்பிக்கை, கருணை மற்றும் பரஸ்பர ஆதரவு மேம்படுத்தப்படுகின்றன.
About UsOur WorkSri Lanka Pride
Our PublicationsOur LeadershipOur StoriesGet Involved