Our Work:

ஊடகப் பயிற்சித் திட்டம்

ஊடக உரிமைசார் வாதாடல்
திட்டம் 2025/2026

Équité நிறுவனம், குயர் சமூகத்தினரின் அனுபவங்களையும் கதைகளையும் பிரதிபலிக்கும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை உருவாக்கும் நோக்கில், தெரிவுசெய்யப்பட்ட ஊடகப் பயிற்சியாளர்களுக்காக இரண்டு நாள் ஊடக உரிமைசார் வாதாடல் பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியது.
இலங்கைத் திரைப்படத் துறையைச் சேர்ந்த பத்து திறமையான இயக்குநர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றனர். ஊடகத்துறை மற்றும் மனித உரிமை நிபுணர்களால் பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டன.
ரோஷெல் அபேவர்தன, அனுஷன் சத்தியசீலன், ஆர். சதுர்ஷன் மற்றும் நவோத்யா ஜயசூரிய ஆகியோர் தலைமையிலான Équité குழுவினர் இத்திட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
இப்பயிற்சி, இலங்கையின் குயர் சமூகத்தினரின் பன்முக அனுபவங்களைப் பிரதிபலிக்கும், அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் கதைகளை உருவாக்கத் திரைப்பட இயக்குநர்களை வலுவூட்டுவதற்கான முக்கியமான படியாக அமைந்தது.

ஊடகப் பயிற்சித் திட்டம் – இரண்டாம் கட்டம்

ஊடகப் பயிற்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, Équité நிறுவனம் தமிழ் மொழி ஊடகத் துறைசார் நிபுணர்களுக்காக யாழ்ப்பாணத்தில் சிறப்புப் பயிற்சித் திட்டத்தை நடத்தியது.
மொத்தம் 20 பங்கேற்பாளர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டதுடன், LGBTIQ+ சமூகத்தினர் தொடர்பான ஊடக உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தனர். நிபுணர் குழுவினால் அவை மதிப்பாய்வு செய்யப்பட்டு, சிறந்த 10 முன்மொழிவுகள் தெரிவுசெய்யப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தமிழ் மொழியில் ஊடக உள்ளடக்கங்களைத் தயாரிப்பதற்கு Équité நிதியுதவி வழங்கியது.

ஊடகப் பயிற்சித் திட்டம் – இரண்டாம் கட்டம்

Équité நிறுவனம், சர்ச்சைக்குரிய ஊடக உள்ளடக்கங்கள் தொடர்பாகச் செயல்படும் ஊடகத் துறைசார் நிபுணர்களுக்கான ஊடகப் பயிற்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடத்தியது.இத்திட்டத்தின் கீழ் 20 ஊடகத் துறைசார் நிபுணர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டதுடன், LGBTIQ+ சமூகத்தினர் தொடர்பான ஊடக உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவுகளையும் அவர்கள் சமர்ப்பித்தனர். நிபுணர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த 10 திட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டன. அவற்றைச் சிங்கள மொழியில் தயாரிப்பதற்கு Équité நிறுவனம் நிதியுதவி வழங்கியது.

ஊடகப் பயிற்சித் திட்டம்

Équité நிறுவனம், சர்ச்சைக்குரிய ஊடக உள்ளடக்கங்களில் பணியாற்றக்கூடிய ஊடகத் துறைசார் நிபுணர்களுக்கான பயிற்சித் திட்டத்தை நடத்தியது. இத்திட்டத்தின் கீழ் 20 ஊடக நிபுணர்களுக்குப் விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.ஒவ்வொரு பங்கேற்பாளரும் LGBTIQ+ சமூகத்தினர் தொடர்பான ஊடக உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கான விரிவான முன்மொழிவைச் சமர்ப்பித்தனர். நிபுணர் குழுவினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, சிறந்த 10 முன்மொழிவுகள் தெரிவுசெய்யப்பட்டு, அவற்றைத் தயாரிப்பதற்கான நிதியுதவியை Équité நிறுவனம் வழங்கியது.

About UsOur WorkSri Lanka Pride
Our PublicationsOur LeadershipOur StoriesGet Involved