Our Work:

திறன் மேம்பாட்டுப் பணிகள்

கெக்கிராவ பயிற்றுநர்களுக்கான 
பயிற்சி – 2025

Équité அமைப்பு, பாலினம், சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அனுராதபுரம், கெக்கிராவையில் இரண்டு நாள் பயிற்றுநர்களுக்கான பயிற்சித் திட்டத்தை நடத்தியது. இதில் கிராம அலுவலர்கள், சமூக சேவை அலுவலர்கள், கள அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.இந்தப் பயிற்சியின் மூலம், வடமத்திய மாகாணத்தில் LGBTIQ+ சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள்வதற்காகப் பயிற்சி பெற்ற அரச அலுவலர்களின் வலையமைப்பு உருவாக்கப்பட்டது. பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய அரச சேவைகளை மேம்படுத்துதல், குறிப்பாகத் திருநர் நபர்கள் எதிர்கொள்ளும் சட்ட ரீதியான தடைகளை நீக்குதல் மற்றும் பாகுபாடின்றி அனைவரும் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் Équité தொடர்ந்து செயல்படுகிறது.

ஹட்டன் பயிற்றுநர்களுக்கான 
பயிற்சி – 2025

Équité Sri Lanka அமைப்பு, மத்திய மாகாணத்தில் மலையக LGBTIQ+ சமூகத்தினர் நீதி மற்றும் அரச சேவைகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள்வதற்காக இரண்டு நாள் பயிற்சியை நடத்தப்பட்டது .
இப்பயிற்சியின் மூலம் பாகுபாடுகளை அடையாளம் காணுதல், தடைகளை நீக்குதல் மற்றும் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய சேவைகளை வழங்குதல் தொடர்பாக அரச அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. கொட்டகலை, ஹட்டன், பொகவந்தலாவை, கொத்மலை, வலப்பனை, நுவரெலியா மற்றும் பூண்டுலோயா பகுதிகளில் அனைவரின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் நோக்கில் Équité தொடர்ந்து செயல்படுகிறது.

யாழ்ப்பாணம் பயிற்றுநர்களுக்கான 
பயிற்சி – 2025

Équité அமைப்பு, வட மாகாணத்தில் LGBTIQ+ சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள்வதற்காக, பாலினம், பாலியல், சமூக உள்ளடக்கம், சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அரச அலுவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியை முன்னெடுத்தது.
இப்பயிற்சியின் மூலம் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய அரச சேவைகளை வழங்குதல் மற்றும் LGBTIQ+ சமூகத்தினர் பாகுபாடின்றித் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துதல் தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவும் திறன்களும் வழங்கப்பட்டன.

கொத்மலை கிராம                      
அலுவலர்களுக்கான பயிற்சி – 2025

Équité அமைப்பு, திருநர் சமூகத்தினருக்கு ஆதரவளிப்பதில் கிராம அலுவலர்களின் பங்கை வலுப்படுத்துவதற்காக கொத்மலையில் இரண்டு நாள் பயிற்சித் திட்டத்தை முன்னெடுத்தது.
இப்பயிற்சியில் பாலினப் பன்முகத்தன்மை, சட்டப் பாதுகாப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரச சேவைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இதன் மூலம் LGBTIQ+ சமூகத்தினருக்குச் சரியான வழிகாட்டுதல்களை வழங்குதல் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதை எளிதாக்குதல் ஆகியவற்றில் அலுவலர்களின் திறன்களை மேம்படுத்தி, அனைவருக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் Équité செயல்படுகிறது.

அமுன கும்புற தொழிற்பயிற்சி
நிறுவனத்தில் பயிற்சி – 2025

இலங்கை சமூக அபிவிருத்தித் திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி அலுவலர்களுக்காக அமுன கும்புற தொழிற்பயிற்சி நிறுவனத்தில் இரண்டு நாள் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்பயிற்சியில் பாலினம், சட்டம், மனித உரிமைகள், திருநர் மற்றும் பாலினப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தினரின் உரிமைகள் மற்றும் சட்ட நிலை, ஆய்வுத் திறன்கள், அனைவரையும் உள்ளடக்கிய சொற்பயன்பாடு மற்றும் LGBTIQ+ சமூகத்தினரின் சட்ட நிலை ஆகியவை தொடர்பாகப் பயிற்சியளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்ற அலுவலர்கள், தேசிய மட்டத்தில் LGBTIQ+ சமூகத்தினரையும் உள்ளடக்கிய ஆய்வுகளை முன்னெடுக்கும் தேசிய ஆய்வுக் குழுவாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொலன்னறுவை பயிற்றுநர்களுக்கான பயிற்சி – 2025

Équité நிறுவனம், பொலன்னறுவையில் அரசாங்கப் பங்குதாரர்களுக்கான பயிற்றுநர் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. இப்பயிற்சியில் SOGIESC, பாலினம், சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அரசாங்க ஊழியர்களிடையே பாலினம் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான சமூகத்தை உருவாக்க இத்திட்டம் பங்களிக்கிறது.

நுவரெலியா இளம்                  தலைவர்களுக்கான 
பயிற்சிப்பட்டறை – 2025

Équité நிறுவனம், கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த இளம் தலைவர்களுக்காக இரண்டு நாள் மேம்பட்ட திறன் வளர்ப்புப் பயிற்சித் திட்டத்தை நடத்தியது. இப்பயிற்சியில் மூலோபாய ரீதியிலான உரிமைசார் வாதாடல், சமூக வலுவூட்டல் மற்றும் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட தொடர்பாடல் ஆகிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
பங்கேற்பாளர்கள் தலைமைத்துவம், முன்மாதிரியாகச் செயல்படுதல், பயனுள்ள தொடர்பாடல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாடு தொடர்பான அறிவையும் திறன்களையும் பெற்றுக்கொண்டனர். இதன் மூலம் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்கள் வலுவூட்டப்பட்டனர். இளம் தலைவர்களின் படைப்பாற்றல் மற்றும் கூட்டுச் செயல்பாட்டின் மூலம், சமூகத்தில் மனித உரிமைகள் இயக்கத்தை வலுப்படுத்துவதில் அவர்கள் அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கத் தயாராக உள்ளனர்.

மட்டக்களப்பு சமூகத்
தலைவர்களுக்கான 
பயிற்சிப்பட்டறை – 2025

Équité நிறுவனம், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் சமூகத் தலைவர்களுக்கான மேம்பட்ட திறன் வளர்ப்புப் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. இப்பயிற்சியில் SOGIESC, நல்லிணக்கம், HIV/STI/AIDS தடுப்பு மற்றும் மனித உரிமைகள் சட்டம் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. இவ்விடயங்கள் தொடர்பான தலைவர்களின் அறிவை மேம்படுத்துவதன் மூலம், மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வதற்கும் அனைவருக்குமான சமத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்கள் வலுவூட்டப்படுகின்றனர்.

யாழ்ப்பாண LGBTIQ+ 
சமூகத்தினருக்கான 
பயிற்சிப்பட்டறை – 2025

Équité நிறுவனம், வட மாகாணத்தில் LGBTIQ+ சமூகத்தினருக்கான இரண்டு நாள் வதிவிடத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை நடத்தியது. Équité நிறுவனத்தின் முன்னாள் பயிற்சிப் பங்கேற்பாளர்களால் நடத்தப்பட்ட இப்பயிற்சி, பங்கேற்பாளர்களின் அறிவு, திறன் மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தியது. மேலும், சமூகத் தலைமைத்துவத்தை வளர்த்து, ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் இத்திட்டம் பங்களித்தது.

இங்கிரிய மனித உரிமைப் 
பாதுகாவலர்களுக்கான பயிற்சி

Équité நிறுவனம், LGBTIQ+ உரிமைகளுக்காகச் செயல்படும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான பயிற்சியை இங்கிரியவில் நடத்தியது. இப்பயிற்சி, அவர்களின் வாதாடல், பொதுப் பேச்சு மற்றும் சமூக மட்டச் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்தி, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் உதவியது.

இலங்கைப் பெருமிதத் 
தன்னார்வலர்கள்

Équité நிறுவனம் நடத்தும் இலங்கைப் பெருமிதக் கொண்டாட்டங்களில், LGBTIQ+ சமூகத்தின் தெரிவுநிலையை மேம்படுத்துவதிலும் நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதிலும் தன்னார்வலர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். வானவில் கிரிக்கெட் போட்டி, நுவரெலியா பெருமிதப் பேரணி மற்றும் வானவில் சந்தை போன்ற நிகழ்வுகள் மூலம் சமத்துவம், ஒற்றுமை மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கின்றனர்.

யாழ்ப்பாணப் பயிற்றுநர்களுக்கான பயிற்சி

Équité நிறுவனம், பல்வேறு துறைகளில் பணியாற்றும் உள்ளூர் பயிற்றுநர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் பயிற்சித் திட்டத்தை நடத்தியது. இப்பயிற்சியில் SOGIESC, சட்டம், பாலினம், HIV, STI, AIDS மற்றும் LGBTIQ+ உரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. இதன் மூலம் வட இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய விழிப்புணர்வுச் செயல்பாடுகளை ஊக்குவிப்பது நோக்கமாகும்.

நுவரெலியாவில் அரசாங்கப்    பயிற்றுநர்களுக்கான பயிற்சி


Équité நிறுவனம், மனித உரிமைக் கொள்கைகளைப் பொதுச் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றும் அரசாங்கப் பயிற்றுநர்களுக்காக நுவரெலியாவில் பயிற்சியை நடத்தியது. இப்பயிற்சியில் SOGIESC, சட்டக் கட்டமைப்புகள், பொது சுகாதாரம் மற்றும் LGBTIQ+ உரிமைகள் தொடர்பான அறிவு வழங்கப்பட்டு, அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் கொள்கை உருவாக்கத்தில் அவர்களின் பங்களிப்பு மேம்படுத்தப்பட்டது.

பதுளை பயிற்றுநர்களுக்கான பயிற்சித் திட்டம்

Équité நிறுவனம், தேசிய மட்டத்திலான தனது செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, பதுளையில் பயிற்றுநர்களுக்கான பயிற்சியை நடத்தியது. இப்பயிற்சியில் SOGIESC, சட்டம், பாலினம், HIV, STI, AIDS மற்றும் LGBTIQ+ உரிமைகள் தொடர்பான அறிவும் உரிமைகளுக்காக வாதாடுவதற்கான திறன்களும் உள்ளூர் பயிற்றுநர்களுக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் பல்வேறு பிராந்தியங்களில் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பது நோக்கமாகும்.

நுவரெலியா பயிற்றுநர்களுக்கான பயிற்சித் திட்டம்

Équité நிறுவனம், பயிற்றுநர்களுக்கான தொடர் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக நுவரெலியாவில் விரிவான பயிற்சியை நடத்தியது. இப்பயிற்சியில் SOGIESC, சட்ட உரிமைகள், பாலின சமத்துவம், HIV, STI, AIDS மற்றும் LGBTIQ+ சமூகத்தினரை உள்ளடக்குதல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பான அறிவு வழங்கப்பட்டது. இதன் மூலம் சமூக மட்டத்தில் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பயிற்றுநர்களை உருவாக்குவது நோக்கமாகும்.

மனித உரிமைப் 
பாதுகாவலர்களுக்கான உரிமைசார் வாதாடல் 
திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Équité நிறுவனம், LGBTIQ+ உரிமைகளுக்காகச் செயல்படும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான பயிற்றுநர் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இப்பயிற்சிகள், அவர்களின் உரிமைசார் வாதாடல், கொள்கைசார் வலியுறுத்தல் மற்றும் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்தி, மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பல்வேறு மட்டங்களில் குரல் கொடுக்க அவர்களை வலுவூட்டுகின்றன.

அநுராதபுரம் பயிற்றுநர்களுக்கான பயிற்சி

Équité Sri Lanka நிறுவனம், SOGIESC, சட்டம், பாலினம், HIV, STI, AIDS மற்றும் LGBTIQ+ உரிமைகள் தொடர்பான பயிற்றுநர் பயிற்சித் திட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. பல்வேறு மட்டங்களில் செயல்படும் பயிற்றுநர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய உரிமைசார் தகவல்களை வழங்குவதற்காக இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இப்பயிற்சி அநுராதபுரத்தில் நடைபெற்றது.

About UsOur WorkSri Lanka Pride
Our PublicationsOur LeadershipOur StoriesGet Involved