அனைவருக்குமான மனிதாபிமானம்

Équité என்பது 2017 மே மாதத்தில் மனித உரிமைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட செயற்பாட்டாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் நிறுவப்பட்ட இலாப நோக்கமற்ற அறக்கட்டளை ஆகும். சமத்துவமும் உட்சேர்க்கையும் என்ற பொதுவான அர்ப்பணிப்பை வழிகாட்டியாகக் கொண்டு, ஆய்வு, கொள்கை ஆதரவு, மனித உரிமைகள், மேம்பாட்டு மற்றும் மனிதாபிமானத் திட்டங்கள் போன்ற துறைகளில் சிறப்பு அறிவு பெற்ற பல்துறை நிபுணர்களைக் கொண்ட நெருக்கமான அணியாக நாம் செயல்படுகின்றோம். இலங்கையின் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கான சமமான வாய்ப்புகளை உருவாக்கி, அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவது எங்களின் பணியாகும். ஒருவரின் பாலின விருப்பம், பாலின அடையாளம் அல்லது பாலின வெளிப்பாடு எதுவாக இருந்தாலும், அவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் சமூகத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கமாகும்.

அவர்கள் பெறத் தகுதியான அன்பை அவர்களிடம் கொண்டு சேர்க்க நாம் செயல்படுகிறோம்.

Training of Trainers
Police Training Program
Media Fellowship Program
எங்கள் பணியின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாக, இலங்கையில் தன்பால்விருப்பத்தவர்களுக்கிடையிலான உறவுகளை குற்றமாக்கும் சட்டங்களை நீக்குவதை அடைவது இடம்பெறுகிறது. தற்போது, எங்கள் நாட்டின் சட்ட அமைப்பு இருவரின் சம்மதத்துடன் உள்ள தன்பால்விருப்ப உறவுகளை குற்றமாகக் கருதுகிறது. இது LGBTIQ+ நபர்களின் மனித உரிமைகளுக்கும் மனித மரியாதைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் உண்மையான அடையாளத்துடன், பாகுபாடு, வன்முறை அல்லது ஒதுக்கல் ஆகியவற்றின் அச்சமின்றி வாழ்வதற்கான உரிமை பெற்றிருக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
மேலும், எங்கள் பணிகள் வேலைவாய்ப்பு, வீடமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் பொது சேவைகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்குகின்றன. இத்துறைகளில் LGBTIQ+ சமூகத்தின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம்.

News &
Updates

Meet Up on 5th of March

சமீபத்திய வெளியீடுகள்

New guideline for the police officers from Act IGP AAL Priyantha Weerasooriya Three Language
Get the Documents in available languages.
LGBTIQ Community perceptions towards Sections 365 and 365a of the Penal Code of Sri Lanka
Get the Documents in available languages.
Glossary of LGBTQ
Get the Documents in available languages.

எங்களுடன் வேலை செய்யுங்கள்

இலங்கையின் LGBTIQ+ சமூகத்திற்குப் பெருமையும் வலிமையும் அளிக்கும் இடமாக Équité செயல்படுகிறது. அவர்களின் பாதுகாப்பும் உரிமைகளும் உறுதி செய்ய தங்களின் ஆதரவு அவசியம். எங்களுடன் கைகோர்க்க கீழே கிளிக் செய்யுங்கள்.
About UsOur Work
Our PublicationsOur LeadershipOur StoriesGet Involved
arrow-leftarrow-right