அனைவருக்குமான மனிதநேயம்

Équité Sri Lanka என்பது இலங்கையில் மனித உரிமைகள், விரிவான பாலியல் கல்வி, பாலியல் சுகாதாரம் , இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் குறித்தும் ,  ஜெனீவா மனித உரிமைகள் உடன்படிக்கை மற்றும் 9 மாகாணங்கள் , 24 மாவட்டங்களில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றும் ஒரு அமைப்பாகும்.

எமது அமைப்பானது இலங்கை பாராளுமன்றம், இலங்கை பொலிஸ், இலங்கை தேசிய வைத்தியசாலை, தேசிய STD மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், இலங்கை குடும்ப அமைப்பு சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம், அரச பல்கலைக்கழகங்கள், குடும்ப சுகாதார பணியகம், சுகாதார மேம்பாட்டு பணியகம், தேசிய மனநல நிறுவனம் போன்ற அரசாங்கப் பங்குதாரர்களையும், அத்துடன் இலங்கையின் கொள்கை மற்றும் சட்டவாக்கத் துறையில் பணியாற்றும் பங்குதாரர்களையும் உள்ளடக்கிய வலையமைப்பு ஆகும்.
“நாம் புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளை பயணம் செய்தபோது, அங்கு உள்ள LGBTIQ+ நபர்கள் மிகப்பெரிய சவால்கள் மற்றும் பாகுபாட்டை எதிர்கொண்டுவருகின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்தோம். பலருக்கு தங்களின் உரிமைகள் அல்லது தங்களின் அடையாளம் கூட புரியவில்லை. இந்த களங்கம் (stigma) மிகவும் ஆழமாக இருப்பதால், பலர் தங்களை நோயுற்றவர்களாக எண்ணுகிறார்கள், மேலும் மாற்றக் கையாளும் சிகிச்சை (conversion therapy) நாடு முழுவதும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த இளம் நபர்களுடன் நெருங்கிச் செயல்படுவதன் மூலம், அவர்கள் தனிநபர் இல்லை என்றும், அவர்களுக்கு போராடத் தகுதியுள்ள உரிமைகள் உள்ளன என்றும் உணரச் செய்துள்ளோம்.”
துஷார மனோஜ்,
தலைவர்,
Équité

எமது நோக்கம் :

இலங்கை முழுவதும் ஒதுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட சூழல்களில் வாழும் LGBTIQ+ சமூகத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சமத்துவத்தை அடைவதில் Équité அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. ஒவ்வொரு தனிநபரும் அவர்களின் பாலின அடையாளம், பாலியல் நோக்குநிலை அல்லது சமூகப் பொருளாதாரப் பின்னணி எதுவாக இருந்தாலும், சமமான வாய்ப்புகள், வளங்கள் மற்றும் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

எங்கள் நோக்கம்:

அறிவை வழங்குதல், திறன்களை மேம்படுத்துதல் மற்றும் மனப்பான்மையை மாற்றுதல், வாதிடுதல், ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் சமூகத்தில் விளிம்புநிலை LGBTIQ+ மக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நிலையை சமமாக உயர்த்துல் ஆகும்.
நாங்கள் விரும்பும் சமூகம் என்பது பல்வகைமையை கொண்டாடும் சமூகமாக, அனைவரும் பாலின ஈர்ப்பு அல்லது பாலின அடையாளத்தை பொருட்படுத்தாமல் மரியாதையுடன் மற்றும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதாக இருக்கும்.

Our Values

சமத்துவம் மற்றும் நீதி

பாலியல் ஈர்ப்பு, பாலின அடையாளம் மற்றும் பாலின வெளிப்பாடு ஆகியவை எதுவாக இருந்தாலும், அனைத்து தனிநபர்களுக்கும் சமமான முறையிலான நடத்தையையும் சமமான வாய்ப்புகளையும் உறுதிப்படுத்துவதற்காகக் குரல் கொடுத்தல்.

மனித மரியாதை

ஒவ்வொரு தனிநபரினதும் உள்ளார்ந்த மதிப்பை நிலைநாட்டுவதுடன், களங்கப்படுத்துதல், பாரபட்சம் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒரே மாதிரியான கருத்துக்களுக்கு சவால் விடுத்தல்.

சமூகத்தால் இயக்கப்படும் அணுகுமுறை

எமது பணியின் மையப் பொறுப்பை LGBTIQ+ சமூகத்தினர் மற்றும் ஆதரவாளர்களின் கைகளில் ஒப்படைத்தல். அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்குவதற்காக நாம் ஒன்றிணைந்து செவிமடுத்து, கற்று, செயற்படுகிறோம்.

வெளிப்படைத்தன்மை

சமூகத்திற்குள்ளும் சமூகத்திற்கு அப்பாலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக, செயற்பாடுகள், முடிவெடுக்கும் செயல்முறைகள் மற்றும் வள முகாமைத்துவம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல்.

படைப்பாற்றல்

நியமங்களுக்குச் சவால் விடுக்கவும், உரையாடல்களைத் தூண்டவும், அனைவரையும் உள்ளடக்கியதும் இரக்கமிக்கதுமான உலகை புதிய வழிகளில் கற்பனை செய்ய ஊக்குவிக்கவும், புத்தாக்கச் சிந்தனைகளையும் கலை வெளிப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளுதல்.
About UsOur Work
Our PublicationsOur LeadershipOur StoriesGet Involved