ஷம்மிகாவின்
கதை

“எங்கள் அயல்பகுதியில் வசித்த ஒரு பெண்ணுடன் நான் காதல் உறவில் இருந்தேன். எங்கள் பெற்றோருக்கு இது தெரியவந்தபோது, ஒருவரையொருவர் சந்திக்கவோ, வீட்டை விட்டு வெளியே செல்லவோ அவர்கள் அனுமதிக்கவில்லை. எனது பெற்றோர் என்னைக் கடுமையாகத் தாக்கினர். நான் குடும்பத்திற்குக் களங்கம் ஏற்படுத்துவதாக என் அம்மா கத்தினார். நான் வீட்டைவிட்டு ஓடிவிடுவதைத் தடுப்பதற்காக என் அப்பா எனது தேசிய அடையாள அட்டையைப் பறித்துக்கொண்டார்.
நாங்கள் தப்பிச் செல்ல முயன்றபோது, என் அம்மாவும் சகோதரியும் எங்களைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், பொறுப்பிலிருந்த காவல் அதிகாரி என்னைக் காவல் நிலையத்தின் தடுப்புக் கூண்டில் அடைத்தார்.
‘இது எனது வாழ்க்கை; எனது முடிவுகளை எடுக்க எனக்கு உரிமை இருக்கிறது’ என்று நான் எனது குடும்பத்தினரிடம் வாதிட்டேன். என்னைக் காவலில் வைத்திருக்க முடியாத நிலையில், நான் வன்முறையாக நடந்துகொள்வதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அன்று இரவு அங்கேயே தங்கினேன். மறுநாள் காலையில் மருத்துவர் என்னைப் பரிசோதித்து, எனக்கு எந்தவிதமான மனநலக் குறைபாடும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். வீட்டில் எனது பாதுகாப்பு குறித்து கவலை கொண்ட மருத்துவர், என்னை விடுவிப்பதில் தயக்கம் காட்டினார்.
அந்த நேரத்தில்தான் Équité தலையிட்டு உதவியது. Équité குழுவினர் மருத்துவமனைக்கு வந்து என்னைச் சந்தித்தனர். அவர்களின் உதவியுடன், எனது குடும்பத்திலிருந்து நான் தன்னிச்சையாகப் பிரிந்து வாழ விரும்புவதைப் பதிவு செய்யும் வகையில் காவல் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்தேன்.Équité நிறுவனத்தின் உதவியால், இறுதியாக வீட்டைவிட்டு வெளியேற முடிந்தது. புதிதாக வாழ்க்கையைத் தொடங்கவும், எனது எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் தேவையான ஆதரவை அவர்கள் எனக்கு வழங்கினர்.”